நாணய சுழற்சியில் தோல்வி – நிதானமாக துடுப்பெடுத்தாடும் இந்தியா

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
மான்செஸ்டரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தற்போது வரை 8.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை குவித்துள்ளனர்.
அணி சார்பில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுள்ளார்.
காயம் காரணமாக ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் அணியில் இடம்பெறவில்லை, அவர்களுக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றுள்ளனர்.
அன்ஷுல் கம்போஜ் தன்னுடைய சர்வதேச அறிமுகத்தை மான்செஸ்டர் டெஸ்ட்டில் பெறுகிறார். முன்னதாக 1990ஆம் ஆண்டு மான்செஸ்டரில் கடைசியாக இந்திய வீரர் அனில் கும்ப்ளே சர்வதேச அறிமுகத்தை பெற்றார்.
அவருக்கு பிறகு அன்ஷுல் கம்போஜ் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார். மேலும் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார்.
இரு அணிகளும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே மூன்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி இரு போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.