17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் – இயக்குநர் சீனு ராமசாமி
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி அவரது மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார். அப் பதிவில் கூறியிருப்பதாவது,
“அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி தர்ஷனாவும் 17 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விடை பெறுகிறோம். இருவரது விருப்பத்தின்பேரில் விவாகரத்து பெறுகிறோம். அவரவருக்கு உண்டான திசைகளில் பயணிக்கவும் அப் பாதை தர்ஷனா மற்றும் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதையும் நான் அறிவேன். இப் பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.