E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) மட்டுமே இந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், E-8 விசா பிரிவின் கீழ் வேறு எந்த நபரோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமோ வேலை வாய்ப்புகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றார்.

எனவே அவர்களுக்கு பணம் செலுத்துவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலை வாய்ப்புகளைப் பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share This