லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…3.8 ஆக பதிவு
லடாக் லே பகுதியில் இன்று காலை 10.32 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
லே பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.