கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நேற்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கசானில் அதிகாரிகள் தாக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கசான் மேயர் அலுவலகம், ட்ரோன்கள் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.

Share This