
CID யில் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அன்று முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
