இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் – கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை

இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் – கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை

எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் இந்நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மூத்த படை தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையே இந்த நிலையை ஏற்படுத்திக்கொண்டாக குற்றம் சுமத்தியுள்ள அவர், அதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் பரிந்துரைகள் எதையும் எந்த அரசாங்கமும் செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடை விதித்திருந்தது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இவர்களுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்கள் பிரித்தானிவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This