டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம்

டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு 03 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா- பிரித்தானியா இடையே தொழில்நுட்ப ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This