தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா?

தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா?

கோயிலிலும் சரி வீடுகளிலும் சரி நல்ல காரியங்களை செய்யும்போது கண்டிப்பாக தேங்காய் உடைப்போம். அதன்படி அந்தத் தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்று பார்ப்போம். பொதுவாக தேங்காயில் இருக்கும் மட்டை மாயை என்றும் நார் கன்மம் என்றும் ஓடு ஆணவம் என்றும் கூறப்படுகிறது. இவற்றை நீக்கிவிட்டு உடைக்கப்படும் தேங்காய் பரிசுத்த ஆன்மா என்று கூறப்படுகிறது.

  • அதன்படி, தேங்காய் சரி பாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும் என்று அர்த்தம்.
  • தேங்காயின் கண் பகுதி பெரிதாகவும் கீழ் பகுதி சிறிதாகவும் உடைந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
  • கண் பகுதி சிறிதாகவும் கீழ் பகுதி பெரிதாகவும் உடைந்தால் வீட்டிலிருந்து வந்த பிரச்சினைகள் தீரும் என்று அர்த்தம்.
  • தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சினை ஏற்படும்.
  • உடைந்த தேங்காயின் உள்ளே பூ இருந்தால் தொடங்கும் காரியம் வெற்றியடையும்.
  • தேங்காய் உடைக்கும்போது உள்ளே அழுகியிருந்தால் நினைத்த காரியம் தள்ளிப்போகும்.
  • தேங்காய் உடைக்கும்போது சுக்குநூறாக உடைந்தால் உங்கள் மேல் இருந்துவந்த கண் திருஷ்டி தூள் தூளாகப் போகும் என்று அர்த்தம்.
  • தேங்காய் உடைக்க எடுக்கும்பே உருண்டோடி விட்டால் உங்கள் வாழ்க்கையும் அதேபோல் உருண்டோடி விடும் என்று அர்த்தம்.
Share This