அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான விசாரணை குழுவின் அறிக்கை நாடாளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சற்று முன்னர் அறிவித்தார்.
இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் தெரிவித்தார்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அவரை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் அந்த குழு சிபாரிசு செய்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதனால், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.