கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

Share This