இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று (07.08.2025) பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில், இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் உடனடியாக துண்டிக்குமாறு கோரி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவாகவும், காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலைப் புறக்கணிக்கவும்! பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்! இஸ்ரேலுடன் உறவுகள் வேண்டாம்!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தினர்.

ஐக்கிய நாடுகள் அமைப்புத் தூதரகம், வெளிவிவகார அமைச்சு, மற்றும் அறிக்கை வெளியிடும் ஊடக நிலையங்கள் நோக்கி
இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பங்கேற்பாளர்களில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர் மற்றும் பொதுமக்கள் இதில் அடங்கினர்.

Share This