கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. சடலம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
