சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி

சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி

சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூமில் மூத்த தளபதியான மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமது இறந்தவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This