நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம்

நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம்

அரிசி இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி இறக்குமதிக்கு தீர்வாக அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தனியார் துறையினருக்கு அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் நேற்று (08) வரையில் 115000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரிசியை இறக்குமதி செய்ய வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால், குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அரிசி இறக்குமதியை நிறுத்தியதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசாங்கம் சார்பில் 980 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்திருந்ததுடன் மேலும் 5200 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This