நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா மற்றும் விசேட தேவைகள் உள்ள அனைவரிடமும் தான் வெளியிட்ட கருத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மன்னிப்பு கோரினார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியிருந்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா குறித்து நான் கூறிய ஒரு கருத்துக்காக நான் விமர்சிக்கப்பட்டேன்.

அவர் பல்கலைக்கழகத்தில் எனது சக மாணவர். அவர் எனது பாடல்களையும் கேட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

அவர் என்னுடன் இப்போதும் ஒன்றாக உணவு உடட்கொண்டார்.

அவரிடமும், மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை ஈடுபடுத்த வேண்டாம்” என்று கூறினார்.

Share This