டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இலங்கையில் வரலாற்று நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், இந்தப் புகைப்படத் தொகுப்பு சேகரிக்கப்படுகின்றது.

இந்த புகைப்படக் கண்காட்சி 2026 பெப்ரவரி 13 முதல் 17 வரை கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற உள்ளது.

டித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பேரழிவு, இடம்பெயர்வு,பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிகள், மனிதாபிமான உதவிகள்,மக்களின் வாழ்க்கையை மீட்டெடுத்தல் போன்றவற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்களை இதற்காக சமர்ப்பிக்க முடியும்.

விசேட குழு மூலம் பொருத்தமான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள், தேசிய கண்காட்சியில் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதோடு, அவை உத்தியோகபூர்வ புகைப்பட நூலிலும் சேர்க்கப்படும். மேலும், அந்தப் புகைப்படங்கள், பதிப்புரிமை தகவலுடன் இணையவழி காட்சிக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

2026 ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர்,

• +94 71 985 9461 WhatsApp இலக்கம்
• www.regeneration.gov.lk இணையத்தளம்
• pmdphotoal@gmail.com மின்னஞ்சல் மூலம் புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்.

இல்லையெனில், புகைப்படப் பிரிவு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 04 வது மாடி, ஸ்டேண்டர்ட் சார்ட்டட் கட்டிடம், ஜனாதிபதி வீதி, கொழும்பு 01 என்ற முகவரிக்கு நேரில் கையளிக்க முடியும். இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். (இணைப்பு 01)

சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு புகைப்படத்துடனும்,

• புகைப்படக் கலைஞரின் பெயர்
• இடம் (மாவட்டம்/நகரம்/கிராமம்)
• திகதி (அல்லது அண்மித்த திகதி)
• காட்சிப்படுத்தப்படும் புகைப்படத்தின் சுருக்கமான விளக்கத்தை வழங்க வேண்டும்.

இந்தப் புகைப்படங்களை சமர்ப்பிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அவமதிப்பு அல்லது பாரபட்சம் ஏற்படாத வகையில் செயற்படுமாறும், குறிப்பாக உயிர் இழப்பு, காயங்கள் அல்லது குழந்தைகளின் புகைப்படங்களை சமர்ப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியுடனும்,மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளித்து, பொறுப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு புகைப்படங்களை சமர்ப்பிக்க விரும்பும் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-01-07

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )