ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்றையப் (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் சாம் கரன் அதிகபட்சமாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது.

18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றின் முதல் முறையாக சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

ஐந்து முறை கிண்ணம் வென்றுள்ள சென்னை அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேற முதல் சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Share This