சஜித் அணிக்குள் நெருக்கடி – கலந்துரையாடல்களுக்கும் இடையூறு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நிலவும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளிடையே கலந்துரையாடல்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும் கூட அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பேச்சுவார்த்தைகளிலிருந்து தங்களது கட்சி இன்னும் விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்விரு கட்சிகளிடையே இடம்பெறும் கலந்துரையாடல்களிலிருந்து விலகியிருந்தார்.
தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக நெருக்கடிகள் காரணமாக இந்த கலந்துரையாடல்களிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.