மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தென் மாகாணத்தில் ஏற்கனவே இதுபோன்ற பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணைகளை நெறிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சில விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.