சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

369 இலட்சம் ரூபா மேலதிக வருமான வரி செலுத்தாமைக்கான காரணங்கள் இருப்பின் நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகர மஹராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தனிநபர் வருமான வரியை செலுத்தாமைக்காக சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.