எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை

எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை

இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் அறிவித்துள்ளன.

மத்​திய கிழக்கு நாடு​களில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயு விநி​யோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்
பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

இந்நிலையில் எல்​பிஜி சமையல் எரிவாயு விநி​யோகம் மற்​றும் சேவை​கள் தொடர்ந்து இடம்பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விரை​வான முன்​ப​திவுகளுக்கும், முறைப்பாடுகளுக்கு தீர்வு காண​வும் வாடிக்​கை​யாளர் அழைப்பு மையம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சம் கொள்வதைத் தவிர்க்குமாறு ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் நிறுவனமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )