மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தர்மபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share This