கொழும்பு பங்குச் சந்தை புதிய மைல்கல்லை எட்டியது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (22) மீண்டும் குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, பங்கு விலைக் குறியீடும் 231.64 புள்ளிகள் அதிகரித்து 16,828.80 இல் நிறைவடைந்துள்ளது. இது ஒரு புதிய உச்சமாகும்.
முதல் 20 நிறுவனங்களைக் கண்காணிக்கும் S&P SL20, 91.21 புள்ளிகள் அதிகரித்து 5,138.66 இல் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில், இன்றைய வருவாய் ரூ. 10.66 பில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.