
கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் நாடு முழுவதும் 1,019 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர இதனை தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் 561 பேரும், தெற்கு மாகாணத்தில் 135 பேரும், மத்திய மாகாணத்தில் 85 பேரும், சபரகமுவவில் 69 பேரும், வடக்கு மாகாணத்தில் 42 பேரும், கிழக்கு மாகாணத்தில் 48 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணம் தற்போது அதிக டெங்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 252 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த நோயாளர்களில் 24 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் டெங்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
