ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு

ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு

சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யா இணைந்து, எஸ். சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை, 2001ல் துவக்கின. இதில், இந்தியா உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சீனாவின் தியான்ஜினில், இம்மாநாடு நடைபெறுகின்றது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “பிரதமர் மோடியை ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு வரவேற்கிறோம். இது ஒற்றுமை, நட்பு மற்றும் பயனுள்ள முடிவுகளைத் தரும் ஒரு கூட்டமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

Share This