
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மீள திறப்பு
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை நாளை முதல் மீள திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன.
வைத்தியசாலைக்கான மின் விநியோகம் நேற்றைய தினம் மீள வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீர் விநியோகமும் சீர் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தினேதி கொக்கலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் சேதங்களுக்கு உள்ளான பகுதிகள் படிப்படியாக சீர் செய்யும் செய்யப்படுவதுடன் பொது மக்களுக்கான சுகாதார சேவைகளை விரைவில் முழுமையாக பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
CATEGORIES இலங்கை
