நோய்களை ஓட ஓட விரட்டும் சேப்பங்கிழங்கு

பொதுவாக கிழங்கு வகைகளில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. அதிலும் சேப்பங்கிழங்கு.
சேப்பங்கிழங்கில் விட்டமின் ஏ,பி6,சி, ஈ, கல்சியம், நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், கார்போவைதரேற்று போன்றவை உள்ளடங்கியுள்ளன.
இதில் அடங்கியிருக்கும் சத்துக்களினால் எலும்புகள் மற்றும் பல்கள் வலுவாகும். குடல் ஆரோக்கியமாக இருக்கும். சமிபாட்டு பிரச்சினைகளை சரி செய்து குடல் புண்களை ஆற்றும்.
இது சருமத்துக்கும் நன்மையளிக்கிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை குறைத்து சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்குகிறது. கண் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்கிறது.
இதில் அதிகமாக மாவுச்சத்து பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. கொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வைக் கொடுக்கிறது.
சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வதனால் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு போன்றவையும் குணமாகும்.
ஆனால் இதயம் பலவீனமானவர்கள் மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் சேப்பங்கிழங்கு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.