வறட்சியான காலநிலையில் மாற்றம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய வறட்சியான காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.