சிறப்புரிமை இரத்து தொடர்பில் சந்திரிக்காவின் விசேட அறிக்கை

சிறப்புரிமை இரத்து தொடர்பில் சந்திரிக்காவின் விசேட அறிக்கை

சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நால்வருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவல்களை  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் முற்றிலும் தவறானவை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படவுள்ளமை தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
எவ்வித சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This