
விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விஜய் இன்று சென்னை திரும்புவார் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொது கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிபிஐ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகி இருந்தார்.
அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
