யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – இந்தூர் மாவட்டத்தில் எச்சரிக்கை

யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – இந்தூர் மாவட்டத்தில் எச்சரிக்கை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.

சுமார் 7 வருடங்களாக இந் நகரம் தூய்மையில் முதலிடம் வகிப்பதால் அடுத்ததாக யாசகர்கள் இல்லாத நகரமாக இதனை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் யாசகர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் யாராவது யாசகர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்தால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.

மேலும் யாசகம் கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் இந்நூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This