
நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.
CATEGORIES இலங்கை
