நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவின் ஆல்பர்ட்டாவில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என எதிர்கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும்
திங்கட்கிழமை வெப்பம் தணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் பகல்நேரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை எட்டும் போது வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தெற்கு ஒன்ராறியோவில் அடுத்த வாரம் முழுவதும் வெப்பம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உடலில் உணரபபடும் அதிகளவான வெப்பநிலை, உடல் சோர்வு,மயக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்துமாறு
மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.