முட்டையை வேக வைத்த நீரால் வீட்டை சுத்தப்படுத்தலாமா?

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன என்று தெரியும். ஆனால், முட்டையை வேக வைத்த நீரின் பலன்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?முட்டைகளை வேகவைத்து எடுத்த பின் அந்த நீரை நாம் கொட்டி விடுகின்றோம். ஆனால், அது மிகவும் தவறு.
முட்டை வேக வைத்த நீரில் மக்னீசியம், கல்சியம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. எனவே இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால் நன்றாக வளரும். காரணம் இந்த நீர் மண்ணின் பீஎச் அளவை சமநிலைப்படுத்துகிறது.
மேலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை காப்பதற்கும் முட்டை அவித்த நீர் உதவுகிறது. தலையில் பொடுகு இருப்பவர்கள் இந்தத் தண்ணீரைக் கொண்டு அலசினால் படிப்படியாக பொடுகுத் தொல்லை நீங்கி முடி பளபளப்பாகும்.
முட்டை அவித்த நீரில் வீட்டைச் சுத்தமாக்கும் திறனும் உண்டு. அதனால் சமையலறை மேற்பரப்புகளை இந்த நீரைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். மேலும் கறைகளை நீக்கவும் இவை பயன்படும்.