இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா… விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா?
அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வின்படி, நியூரோன்கள் எனப்படும் நரம்பு செல்களின் இணைப்புகளாக சேமிக்கப்படுவதாகக் கூறுகின்றன.
இந்த நியூரோன்கள் குறிப்பிட்ட நினைவோடு தொடர்புடைய எனகிராம் எனப்புடும் வலையமைப்பை உருவாக்குகின்றன.
இறந்த எலிகளின் மூளையில் இந்த என்கிராம்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், மனித மூளையில் இருந்து இந்த நினைவுகளை மீட்டெடுப்பது கடினம்.
இருப்பினும் தொடர் முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கூறுகின்றனர்.