ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்

ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வதற்காக பணிகளில் ஈடுபட பிரித்தானியா தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போது ஃப்ளீட் ஒக்ஸிலரி கப்பல்களில் ஒன்றை தானியங்கி நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களின் உதவியுடன் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக பிரித்தானியா ரோயல் கடற்படையின் லைம் பே என்ற கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்ப தயாராகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

580 அடி நீளமுள்ள கப்பலை அப்பகுதிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு பாதுகாப்புச் செயலர் ஜான் ஹீலி ஒப்புதல் அளித்துள்ளதாக ‘ தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதிநவீன ஆளில்லா உபகரணங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதால், ரோயல் கடற்படை தனது கண்ணிவெடி தேடும் திறன்களை அதிகரித்து வருகிறது.

இந்த உபகரணம் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது எனவும் லைம் பே இதற்கு ‘தாய்க்கப்பலாக’ செயல்படும்,” என்று ரோயல் கடற்படையின் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )