
பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை நாட்டை வந்தடைந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் சிலர் அவர்களை வரவேற்றனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள நிலையில்
பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் அவர் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று இதற்கான விழா (17) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
