பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; சம்பியனானார் ஜிரி லெஹெக்கா

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; சம்பியனானார் ஜிரி லெஹெக்கா

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவை வீழ்த்திய செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

புகழ்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா, உலக தரவரிசையில் 293வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியில் லெஹாக்கா 4:1 என்ற கணக்கில் முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரைய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்றார்.

Share This