இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்த பிரேசில் நாட்டவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சுமார் ஐந்து கிலோகிராம் கோகைனை கடத்த முயன்றபோது பிரேசில் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 240 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 59 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, கோகைன் தொகை 4 கிலோகிராம் 855 கிராம் எடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்தப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் என்பன விமான நிலையத்தில் உள்ள போதைப் பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.