பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இந் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த இளைஞன் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த அடையாளந் தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.