ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்

ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்

இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது தாக்குதலுக்கு உள்ளான ஹிருதய் லால் என்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரின் உறவினர்கள் சடலத்தை வீதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே ஹிருதய் லால் உடல் நடு வீதியில் இறக்கிவிடப்பட்டிருந்தது. இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.

குடும்ப உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் வீதியில் கூடி, உடலைச் சுற்றி அமர்ந்து நீதி கோரி போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் உடலை அகற்றி போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர். பின்னர் பொலிஸாரின் மேற்பார்வையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோண்டா வட்ட அதிகாரி ஆனந்த் குமார் ராய் உறுதிப்படுத்தினார். “நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம், விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share This