தங்காலையில் வீடு ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்பு

தங்காலை – சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொரியில் ஐஸ் என்ற போதைப்பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர், மேலும் இந்த சம்பவம் குறித்து அரச ஆய்வாளர் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.