மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு

ஹங்கம, ரன்ன, வடிகல – பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று குறித்த உடல்களின் பிரேத பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.