பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் என்ன?
கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பு, பேர வாவியில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழக்கின்றமைக்கான காரணம் தொடர்பில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது
இந்த அறிக்கை மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு பிரிவின் தலைவர் ஷியாமலி வீரசேகர தெரிவித்திருந்தார்
எவ்வாறிருப்பினும், உயிரிழந்த 25 பறவைகளில், 07 பறவைகளின் உடல்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக ஹோமாகம கால்நடை புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது