டாஸ்க்கில் நடந்த விபரீதம்…மருத்துவமனையில் பிக்பொஸ் போட்டியாளர்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 5 வாரங்களே மீதியிருக்கின்ற நிலையில், விளையாட்டுக்கள் சற்று கடினமாக மாறியுள்ளன.
இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரமோவில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது ராணவ்வுக்கு கையில் பலமாக அடிபட்டு விட்டது.
அனைவரும் சேர்ந்து ராணவ் நடிப்பதாக கூறிய நிலையில், அருண் ஓடி வந்து அவரை கன்பக்ஷன் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.
சிறிது நேரத்தில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என பிக்பொஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கான ப்ரமோ இதோ…