ஆரோக்கியத்துக்கு ஏற்றது ‘இளஞ்சிவப்பு உப்பு’

ஆரோக்கியத்துக்கு ஏற்றது ‘இளஞ்சிவப்பு உப்பு’

சமையலில் உப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரண உப்பை விட ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள் பயன்படுத்தும் உப்பு தான் இளஞ்சிவப்பு உப்பு.

இந்த இளஞ்சிவப்பு உப்பில் இரும்புச் சத்து, கல்சியம், துத்தநாகம், மெக்னீசியம்,தாமிரம் ஆகியவை உள்ளன.

இந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தசைகளிலுள்ள பிடிப்பு குறையும். உடல் எடை குறையும்.

இவ் வகை உப்பில் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால் தசைகளில் வீக்கம், வலி போன்றவை குணமாகும். இதனை இளம் சூடான நீரில் கலந்து குடிக்கலாம். ஆனால், அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

ஆயுர்வேத மருத்துவத்தில் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுவலி ஆகியவற்றுக்கு இந்த இளஞ்சிவப்பு உப்பு பயன்படும்.

அதிக வயிற்றுவலி இருப்பின் தயிரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி சேர்த்து இந்த உப்பு கலந்து குடிக்க வேண்டும்.

மேலும் தொண்டை வலி, சளி, இருமல் பிரச்சினை இருப்பவர்கள் இந்த உப்பை உட்கொள்ளலாம். இதனை நீரில் கலந்து வாய் கொப்பளித்தல் நல்லது.

Share This