வாழை இலையில் உணவு….இன்று வரை குறையாத மவுசு
![வாழை இலையில் உணவு….இன்று வரை குறையாத மவுசு வாழை இலையில் உணவு….இன்று வரை குறையாத மவுசு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/rmjkg64_indian-food_625x300_25_July_23.webp)
என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பழைய கலாசாரங்களின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதன்படி என்னதான் எவர்சில்வர், பீங்கான், பேப்பர் தட்டுகள் வந்து போனாலும் வாழை இலைக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அப்படி வாழை இலையில் சாப்பிடுவதில் என்ன விசேஷம் இருக்கிறது?
சைவம், அசைவம் இரண்டுமே வாழை இலையில் வைத்து சாப்பிடும்போது வயிறு கோளாறு சரியாகும்.
குறுகின பக்கம் இடது கைப்பக்கம் வரவேண்டும். இலையின் மேல் பக்கம் தொடு கறி எனப்படும்.
அதேபோல் வாழை இலையில் உணவு உண்டுவிட்ட உள் பக்கமாக மடித்தால் உறவு நீடிக்கும். வெளிப் பக்கமாக மடித்தால் உறவு முறியும் என்பார்கள்.