‘மசாலாக்களின் ராணி’ எது தெரியுமா?

சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாக்களில் ஏலக்காய்க்கு என்றுமே தனியிடமுண்டு. ஏலக்காய்க்கு மசாலாக்களின் ராணி என்றும் ஒரு பெயர் உண்டு.
காரணம் அதன் நறுமணம் மற்றும் தனித்துவமான சுவை சமையலுக்குள் ஒரு மாயாஜாலத்தையே செய்து விடும் என்று கூறலாம்.
பொதுவாக ஏலக்காய் செடிகள் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது.
அதுமட்டுமின்றி ஏலக்காயில் விட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த சத்துக்கள் செரிமான பிரச்சினைகளுக்கு உறுதுணையாக அமைகிறது. மேலும் வாந்தி, அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
ஏலக்காயில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசியைத் தூண்டி, அமிலத்தன்மையை எதிர்க்கும்.
ஏலக்காயில் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம். இதனால் வாய் துர்நாற்றத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. தொற்றுநோய்களுக்கு எதிராகவும் போராடுகிறது.
ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும். ஏலக்காயிலுள்ள ஒட்சிசனேற்ற பண்புகள் வீக்கங்களை குறைத்து இதய ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது.
சமையலையும் தாண்டி தேநீர் வகைகளில் ஏலக்காய் அதிகம் பயன்படுகிறது.
இவ்வாறு இதன் பலவிதமான நன்மைகளால் மசாலாக்களின் ராணி என அழைக்கப்படுகிறது.