நிலந்தி கொட்டஹச்சியின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு

நிலந்தி கொட்டஹச்சியின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று (20) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது.

கெசெல்வத்த கிம்பத பிரதேசத்தில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி இதனை தெரிவித்ததாக குறித்த செய்தி சுட்டிக்காட்டியிருந்தது.

குறித்த செய்தி சமூக வலைத்தளங்களிலும்,  செய்தி ஊடகங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், எதுவித உண்மைத் தன்மையும் இன்றி தன்னைப் பற்றி உறுதிப்படுத்தப்படாத போலியான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் ஆராயுமாறு நிலந்தி கொட்டஹச்சி சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

Share This